2027 வரவு செலவுத் திட்டம்: பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பயிற்சிக் கொப்பிகளுக்கு வட் வரி நீக்கம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், பாடசாலைப் பயிற்சிக் கொப்பிகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல்வேறு அச்சிடப்பட்ட கல்வி நூல்களுக்கு பெறுமதி சேர் என்ற வட் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணையின்படி, பின்வரும் பொருட்களுக்கு வட் வரி விலக்கு வழங்கப்படவுள்ளது.
- பாடசாலைப் பயிற்சிக் கொப்பிகள்.
- பாடநூல்கள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள்.
- அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்.
- சிறுவர்களுக்கான படப்புத்தகங்கள், வர்ணம் தீட்டும் புத்தகங்கள்.
- கல்விசார் வெளியீடுகள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட நூல்கள்.
- அச்சிடப்பட்ட இசைத் தாள்கள்.
நோக்கம்
2024 ஜனவரி முதல் அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏனைய அச்சுப் பொருட்களுக்கு வட் அறவிடப்பட்டு வந்த நிலையில், இந்த வரி விலக்கு கல்வி வளங்களை குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், சினிமா நுழைவுச்சீட்டுகளுக்கான VAT கணக்கீட்டு முறையிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தத்தமது வருமானப் பங்கின் அடிப்படையில் வெட் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை ஆர்டிமியா முட்டைகள் மற்றும் தேங்காய் நார் தூளுக்கான தற்போதைய VAT விலக்குகளை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வட் திருத்தங்களால் அரசாங்கத்திற்கு சுமார் 2.975 பில்லியன் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி மாற்றங்கள் 2027 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri