நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு - அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவியை வழங்குவதற்காக, “அஸ்வெசும” உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 2027 ஆம் ஆண்டில் 230 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri