ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்ற இரண்டு நிதி இராஜாங்க அமைச்சர்கள்! அம்பலப்படுத்தும் ஜேவிபி
வரவு செலவுத் திட்டத்தினை இறுதி செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வேளை, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இரண்டு நிதி இராஜாங்க அமைச்சர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு செலவுதிட்டத்தினை தயாரிக்கும் போது ஆதரவு வழங்கியுள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
பொதுஜன பெரமுனவுக்கு வேறு வழியில்லை
வரவுசெலவுதிட்டத்தினை இறுதி செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வேளை பொதுஜன பெரமுனவை சேர்ந்த இரண்டு நிதி இராஜாங்க அமைச்சர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
தற்போதைய அமைச்சரவையில் ஹரீன் பெர்ணான்டோ மனுச நாணயக்கார இருவரையும் தவிர ஏனையவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்லது தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டவர்கள்.
2024 வரவு செலவுத் திட்டம் என்பது விக்ரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் குழந்தை. அதற்கு ஆதரவாக வாக்களிப்பதை தவிர பொதுஜன பெரமுனவிற்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



