வரவு - செலவுத் திட்டம் 2024 : துண்டு விழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைய 2024ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும்.
அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபாவாகும்.
இதற்கிணங்க, வரவு - செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபாவாகும்.
அரச ஊழியர்களின் கொடுப்பனவு
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு - செலவுத் திட்ட யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு - செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் அல்லது வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு - செலவு திட்டக் குழுநிலை விவாதம் எனப்படுகின்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்றி உள்ளது; பாரிய தொழிற்சங்க போராட்டம் குறித்து எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |