தமிழ்மொழி மீதான ஈர்ப்பு: பௌத்த தேரர் ஒருவரின் தமிழர்களை வியக்கவைக்கும் செயல்!
சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பௌத்த தேரர் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப்படிப்பில் டிப்ளோமாவை பெற்றுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் கடந்த 21அம் திகதி இடம்பெற்றன.
இதில் முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் தமிழ்மொழிக் கல்வியில் பட்டம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
“நான் களுத்துறையில் இருந்து வந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளோமா கல்வியை நிறைவு செய்துள்ளேன். நான் 2013ஆம் ஆண்டளவிலேயே முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். அப்போதிலிருந்தே அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன்.
அன்றிலிருந்து இன்று வரை நான் எந்தவொரு ஹோட்டலிலும் தங்கவில்லை. நண்பர்கள் வீட்டிலேயே தங்கி அவர்களின் வீடுகளிலேயே உணவு உட்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |