சிங்களவருக்கு எதிராக பேசுவோரை பாதுகாக்கும் பௌத்த நாடு: சரத் வீரசேகர - செய்திகளின் தொகுப்பு
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (09.02.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இது சிங்கள பௌத்த நாடல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறுகின்றார். இவர்கள், குருந்தூர் மலையிலுள்ள விகாரைக்கு சென்று மலரொன்றையேனும் வைத்து வழிபடுவதற்கு பிக்குகளுக்கு இடமளிப்பதில்லை.
எனினும், அவர்கள் இங்கும் பாதுகாப்பாகவே உள்ளனர். இது சிங்கள பௌத்த நாடு என்பதனாலேயே இவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,




