பௌத்த பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசாங்கம்: ராஜ்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
மக்கள் மத்தியில் மீண்டும் பௌத்த இனவாதத்தை வேரூன்ற வைத்து நாட்டினுடைய
அடிப்படை பிரச்சினைகளை மறக்கச் செய்து அதனூடாக பௌத்த பேரினவாத அரசியலை
முன்னெடுப்பதற்கான காய்நகர்த்தல்களை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றதாக
காலிமுகத்திடல் போராட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளரும், சமூக
செயற்பாட்டாளருமான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவான சில கருத்துக்கள் மற்றும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலே ஒரு மதச் சார்பின்மையும், மதம் தொடர்பாகக் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்கிற ஒரு நிலைப்பாட்டையும் இந்த அரசாங்கம் கொண்டிருக்குமாக இருந்தால் திட்டமிட்டு மதமொன்றை இழிவுப்படுத்தியர்கள் மேல் ஏன் சட்டம் பாயவில்லை?
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
