என்னிடம் பௌத்த நூல்கள் இல்லை அதனால் தீவிரவாதி என TIDயினர் குறிப்பிட்டனர் : கவிஞர் அனாப் ஜாசீம்
என்னிடம் பௌத்த நூல்கள் இல்லாத காரணத்தினால் நான் ஓர் தீவிரவாதி என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டனர் என கவிஞர் அனாப் ஜாசீம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் எதிர்நோக்கிய அனுபவங்கள் தொடர்பில் அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியரும், கவிஞருமான அனாப் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கவிதை நூல் ஒன்றின் மூலம் கடும்போக்குவாதத்தை ஊக்குவித்தார் என அனாப் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி அனாப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பௌத்த மதம் தொடர்பான புத்தகங்கள் எதுவும் தம்மிடம் இல்லாத காரணத்தினால் தாம் ஓர் தீவிரவாதி என பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குற்றம் சுமத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் நூல்கள் வைத்திருப்பதாகவும் பௌத்த நூல்களை நான் வைத்திருக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் கடுமையான தொனியில் விசாரணை நடாத்தியதாகவும், பலவந்தமான அடிப்படையில் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தொடர்பு உண்டு என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்காவிட்டால் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட யுவதியையும் கைது செய்வோம் என மிரட்டியதாகவும் அனாப் ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ் Cineulagam
