யாழில் புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை

Jaffna University of Jaffna
By Kajinthan Aug 02, 2023 08:26 AM GMT
Report

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று (01.08.2023) புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை தொடர்பாக தமிழ் மாணவர்களுக்கு விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், நேற்று புத்தர் சிலை வைத்து வழிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலைப்பீட தமிழ் மாணவர்களை இன்றையதினம் (02.08.2023) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில், நேற்றையதினம் போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர். அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது.

இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது. இதன்போது குறுக்கிட்ட கலைப்பீட தமிழ் மாணவர்கள், புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தினுள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

யாழில் புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை | Buddha Statue Affair Investigation To Students

அச்சுறுத்தும் செயற்பாடு

இதன்போது அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் மாணவர்களை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, "நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்" என்றனர்.

அதனையும் மீறி தடுக்க முடியாத கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கிருந்து அகன்றனர். ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.

தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகமானது தமது கதிரைகளை தக்க வைப்பதற்காக அடுத்தடுத்த கட்டங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை வைத்துவிட்டு விகாரை கட்டுவதற்கும் அனுமதி கொடுக்கும் என பல தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US