அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய கொலை - நாற்காலியில் கட்டப்பட்டு மீட்கப்பட்ட சடலம்
இரத்தினபுரி - கட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த கொலை நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் நாற்காலியில் கட்டப்பட்டு, தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இரத்தினபுரி , கஹங்கம, கட்டலியன்பல்லவை சேர்ந்த 61 வயதான ஹல்பவலகே குலரத்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை நடந்த வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயது நபர், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், கொலை நடந்த வீட்டை பராமரித்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்
YOU MAY LIKE THIS VIDEO..