இலங்கைக்கு பயணத்தடை! - புரூணை அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை உள்ளிட்ட மேலும் மூன்று தெற்காசிய நாடுகளுக்கு புருணை பயணத்தடை விதித்துள்ளது.
தெற்காசியா முழுவதும் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு புருணை பயணத்தடை விதித்துள்ளது.
மே 17ம் திகதி முதல் இந்த தடை அமுலாகும் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 13ம் திகதி முதல் இந்தியாவிற்கும் புருணை பயணத்தடை விதித்திருந்து.
இதன்படி, குறித்த ஐந்து நாடுகளில் இருந்து முன் அங்கீகரிக்கப்பட்ட விமானங்கள் வழியாக புருணைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நாட்டினருக்கும் பயணத்தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த ஐந்து நாடுகளிலிருந்து புறப்படும் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் புருணை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam