வீட்டிலிருந்து திடீரென காணாமல்போயுள்ள சகோதரர்கள்!விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை (Photo)
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும், தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மாமியுடன் வசித்து வந்த 15 மற்றும் 13 வயதுடைய அண்ணனும், தம்பியும் இன்று (08) மாலை மின் தடை ஏற்பட்ட போது வீட்டை விட்டு புறப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சிறுவர்கள் தொடர்பாக யாராவது தகவல் தெரிந்தால் உடனடியாக 0262255031 எனும் இலக்கத்திற்கு கோமரங்கடவல பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறும் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது எம்.கே. பியுமந்த மெனுவன் மற்றும் எம்.கே.சிஹான் அப்பர் ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளதாகவும் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri