தென்னிலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் குத்திக் கொலை
தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக காலி பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் காலி பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பழைய பகை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வலவத்தை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.