சகோதரர்கள் மீது சுமத்தப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் : நாமல் சாடல்
சகோதரர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஈடுபடுவது தாம் என்ற போதிலும் தமது சகோதரர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யோசித மீது அனைத்து குற்றச்சாட்டுக்களும்
தமது குடும்பத்தினரை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் இதனால் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் தமது குடும்ப உறுப்பினர்கள் அந்த இடத்தில் இருந்தால் அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இன்று இப்தார் நிகழ்வில் பங்கேற்றிருப்பதாகவும் இதில் ஏதேனும் ஓர் சம்பவம் இடம்பெற்றால் அந்த சம்பவம் தொடர்பில் அனைத்து குற்றச்சாட்டுக்களும் தம்மீது சுமத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்தார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரர் யோசித அண்மையில் பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அங்கு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், அந்த இடத்தில் இருந்த காரணத்தினால் யோசித மீது அனைத்து குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

திருப்பியடிக்கும் கனேடிய மக்கள்... ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
