வன்முறையில் ஈடுப்பட்ட அரசியல்வாதியின் சகோதரர்
புத்தளம் பிரதேச அரசியல்வாதியொருவரின் சகோதரர் எரிபொருள் வரிசையில் ஒரு பொதுமகன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று(18) நடைபெற்றுள்ளது.
சம்பவம்
பிரதேசத்தின் மிக முக்கிய அரசியல்வாதியொருவரின் மூத்த சகோதரர் ஒருவரே இவ்வாறு எரிபொருள் வரிசையில் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளார்.
எரிபொருள் வரிசையில் நின்ற பொதுமகன் ஒருவரை அரசியல்வாதியின் சகோதரரும் அவரது நண்பர்களும் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதனைத் தடுக்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் இதன்போது அவர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பொதுமகன் சிலாபம் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அரசியல்வாதியின் சகோதரரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.