அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி : காணித் தகராறால் விபரீதம்
அம்பாந்தோட்ட , வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட காணித் தகராறு காரணமாக, அண்ணனைத் தம்பியே அடித்துப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று(01.06.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி இரு சகோதரர்களுக்கும் இடையே நீண்டகாலமாகக் காணித் தகராறு நிலவி வந்துள்ளது.
நேற்று மாலை இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் ஸம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய தம்பியைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri