போதை மாத்திரைகளுடன் சகோதரர்கள் இருவர் கைது
திருகோணமலை உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் நேற்று(17.07.2024) மேற்கொள்ளப்பட்டதாக உப்பு வெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
இதன்போது, 26 மற்றும் 28 வயதுடைய சகோதரர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan