யாழில் சமூக பிறழ்வான விடுதி: இரு பெண்களை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள்
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குளப்பிட்டி சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சமூக பிறழ்வான நடத்தையில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர் என பொதுமக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் கண்டுகொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டை முற்றுகையிட்டு குறித்த மூவரையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கொக்குவில் குளப்பிட்டி பிரதேச மக்கள் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, அங்கிருந்த மேலும் இருவர் வீட்டின் பின்பகுதியில் இருந்து தப்பி ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது மட்டுமின்றி யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்தி தொடக்கம் ஆனைக்கோட்டை பகுதி வரை வரிசையாக இவ்வாறான முறையற்ற விடுதிகள் இயங்கி வருவதாகவும் இதுவரையில் எந்தவொரு விடுதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், குளப்பிட்டி கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |