மசாஜ் நிலையம் என இயங்கிய போலி விடுதிகள்: பொலிஸாரிடம் சிக்கிய ஏழு பெண்கள்
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப்பிறழ்வான விடுதிகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முற்றுகையிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பொலிஸார் நேற்றிரவு(12.03.2023) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த விடுதிகளில் இருந்து ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்றிரவு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அதன் பிரகாரம் கல்கிஸை பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 29 வயது தொடக்கம் 42 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம்(13.07.2023) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |