தேசிய யூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை
தேசிய யூடோ போட்டியில் முல்லைத்தீவு - துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு
இடையிலான தேசிய யூடோ போட்டி கொழும்பில் கடந்த மூன்று தினங்களாக
நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தேறாங்கன்டல் அ. த. க பாடசாலை மாணவன் யதுர்ஷன் 66 Kg மேல் நிறைப்பிரிவில் பங்கு கொண்டு தேசிய வெண்கலப் பதக்கத்தை தமதாக்கி பாடசாலைக்கும், வலயத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
மேலதிக பயிற்சி வழங்கலுடன் குறித்த மாணவனுக்கான பயிற்சியை பாடசாலையின் பயிற்றுனர் ர. லக்சன் வழங்கியதுடன் இப்பதக்கத்தினை பெற பாடசாலை அதிபர் பாடசாலை நிர்வாகம் ஊக்கமும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







