ஆலய உண்டியலை உடைத்த சந்தேகநபர் - மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த காவலாளி
மட்டக்களப்பு - கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்திற்கு மன்னார் வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முற்பட்ட ஒருவரை ஆலய காவலாளி மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் முன்னால் திருப்பெருந்துறை வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலய உண்டியலை சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் உடைத்துள்ளனர்.
இதன்போது சத்தம் கேட்டு ஆலயத்தில் காவலுக்கிருந்த காவலாளி வீதிக்கு வந்தபோது உண்டியலை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரை வரவழைத்து ஒப்படைத்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
