அதிகரித்து வரும் பணவீக்கம் - பிரித்தானியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், 15 வீதமான மக்கள் தற்போது உணவு வங்கிகளைப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகரித்து வரும் உணவு விலைகள் இங்கிலாந்து முழுவதும் 15 வீத மக்கள் உணவு வங்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. உணவுப் பொருட்களின் விலை கடந்த செப்டம்பரில் இருந்ததை விட தற்போது 10.6 வீதம் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஆகஸ்டில் 5.1 வீதமாக இருந்த மொத்த கடை விலை பணவீக்கம் இந்த மாதம் 5.7 வீதமாக அதிகரித்துள்ளது.
தள்ளுபடியை எதிர்பார்க்கும் மக்கள்
இதன் காரணமாக 64 வீதமாக பிரித்தானியார்கள் பல்பொருள் அங்காடியின் விலைப் பொருத்தம் மற்றும் ஆன்-ஷெல்ஃப் சலுகைகள் இனி தங்கள் அதிகரித்து வரும் உணவுக் கட்டணங்களைத் தணிக்க போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் காரணமாக 50 வீதத்திற்கும் அதிகமான மக்கள் தள்ளுபடி பல்பொருள் அங்காடிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மலிவான விலையின் பலன்களைக் கூட தற்போது பார்க்கவில்லை என கூறப்படுகின்றது.
Ubamarket என்ற மளிகை விற்பனை செயலியின் ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்பொருள் அங்காடிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறுகிய லாப வரம்பில் தங்கியுள்ளனர்.
நுகர்வோர் மீது சுமை ஏற்படுகின்றது
இருப்பினும் பெரும்பாலான தொழில்கள் பணவீக்க விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பொருட்கள் மற்றும் உணவுகள் வலுவான தாக்கத்தை உணர்ந்துள்ளனர் எனவும் Ubmarket இன் தலைமை நிர்வாகி வில் ப்ரூம் கூறினார்.
விநியோகஸ்தர்கள் பொதுவாக சிறிய விலை உயர்வுகளைக் கோருவார்கள், இப்போது விநியோகஸ்தர்கள் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட 10 வீத அதிகரிப்புகளைக் கோருவதைக் காண்கிறோம். இது நேரடியாக நுகர்வோரை பாதிக்கின்றது.
நாள் முடிவில் அது லாபத்தின் மீதான இழுபறியாக மாறுவதுடன், நுகர்வோர் மீது சுமை ஏற்படுகின்றது.
பணவீக்கத்திற்கு ஏற்ப உணவுப் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கும் அதே வேளையில், 2023 ஆம் ஆண்டு வரை இது நடக்காது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.