துபாயில் ஈரானிய ஏவுகணைகளைப் படம் பிடித்த பிரித்தானியர் கைது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தனது கைபேசியில் காணொளி எடுத்த பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவர் அந்நாட்டு இணையக் குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான காட்சிகளைப் பரப்புவதற்குத் தடை விதித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துபாயின் புகழ்பெற்ற கட்டடங்கள்
லண்டனைச் சேர்ந்த இவருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் இதே போன்ற காரணங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் துபாயின் புகழ்பெற்ற கட்டடங்கள் சில சேதமடைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தைப் போக்கவும் நாட்டின் பாதுகாப்பான பிம்பத்தைத் தக்கவைக்கவும் இத்தகைய கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்க பிரித்தானிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், துபாய் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அங்கு சிக்கியுள்ள தனது நாட்டு குடிமக்களை மீட்பதற்காகப் பிரித்தானிய அரசு விசேட விமானங்களை ஏற்பாடு செய்து வருவதுடன், சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்: இஸ்ரேல் முழுவதும் ஒலிக்கும் அபாய எச்சரிக்கை ஒலிகள்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam