காணாமல் போயுள்ள பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவ அதிகாரி
பிரித்தானியாவின் புகழ்பெற்ற சன்டஸ்ட்(Sandhurst) இராணுவ கல்லூரியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய இலங்கையின் கெடற் அதிகாரியான இரண்டாம் லெப்டினன்ட் பதவியில் உள்ள ஒருவர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
44 வார தீவிர பயிற்சிக்குப் பிறகு வெளியேறிய 209 அதிகாரிகளில் ஒருவரான அவர், பயிற்சிக்கு பின்னராக அணிவகுப்பை அடுத்து இந்த வாரம் இலங்கைக்கு திரும்பவிருந்தார்.
எனினும் திட்டமிடப்பட்ட விமானத்துக்கு அவர் வரவில்லை.
விமான நிலையம்
முன்னதாக, இலங்கையின் பிரித்தானிய உயர் ஸ்தானிகரகம், கடந்த சனிக்கிழமையன்று அவருக்கான விமான நிலைய போக்குவரத்தை ஏற்பாடு செய்ய முன்வந்தபோது, அவர் அதனை நிராகரித்து தாமே நேரடியாக விமான நிலையத்துக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அவர் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் இடம் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு தெரியும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாவனல்லையை சேர்ந்த இந்த அதிகாரியின் செயல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri