பிரித்தானிய அரசின் திடீர் அறிவிப்பு! - ஏமாற்றத்துடன் நாடு திரும்பும் மக்கள்
பிரித்தானிய அரசின் திடீர் அறிவிப்பு காரணமாக போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பு வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோவிட் தொற்றின் அதிகரிப்பு காரணமாக பசுமை நாடுகளின் பட்டியலில் இருந்து போர்ச்சுகல் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, போர்ச்சுகலில் இருதுந்து நாடு திரும்பு பிரித்தானியர்கள் பத்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், பிரித்தானியர்களை மீளவும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு திரும்புவதற்கு முன்னர் சோதனைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியர்கள் விடுமுறைக்கு பயணிப்பதற்கான பசுமை நாடுகளின் பட்டியலில் போர்ச்சுகல், ஜிப்ரால்டர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை கடந்த மாதம் பிரித்தானியா இணைத்துக்கொண்டது.
இதன்படி, குறித்த நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, வருகைக்குப் பிந்தைய ஒரு கோவிட் சோதனை மட்டும் செய்துகொள்ளபட வேண்டும்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை போர்ச்சுகல் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம் பெரும் என்று அரசாங்கம் அறிவித்தது.
அரசாங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக போர்ச்சுகல் சென்ற பிரித்தானியர்கள் தமது பயணங்களை இடையில் முடித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்புகின்றனர்.
இதனால் போர்ச்சுகல் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பிரித்தானியர்கள் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, திங்களன்று 39 விமானங்கள் அல்கார்வேயில் உள்ள ஃபாரோ விமான நிலையத்திலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை வழமையை விட இரு மடங்காகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் விலையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை பாதுகாக்க பயணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என” சுகாதார செயலாளர் மட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.