2023 தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புத்தாண்டு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ செய்தியில் கடினமான 12 மாதங்களின் முடிவில் "பிரித்தானியாவின் பிரச்சினை 2023-ல் நீங்காது" என்று இன்றைய தினம் எச்சரித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் அம்சங்கள் பிரித்தானியாவிற்கு கடினமாக அமைந்தது.
சுனக் உறுதி
In his New Year message, the Prime Minister @RishiSunak reflects on 2022 and sets out his priorities for 2023. pic.twitter.com/5zGMYQcwR0
— UK Prime Minister (@10DowningStreet) December 31, 2022
குறித்த வீடியோவில், புத்தாண்டில் நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நான் காட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் வரும் மாதங்களில் மிகச் சிறந்த பிரித்தானியாவை வெளிக்கொணர ஓய்வில்லாமல் உழைப்பேன்.
ஆனால் 2023 உலக அரங்கில் பிரித்தானியா மிகச் சிறந்ததை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அதை பாதுகாக்கும்."
ரஷ்யா-உக்ரைன் போர்
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், குற்றவாளிகள் பிரித்தானியாவின் புகலிட அமைப்பை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கவும் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.
காட்டுமிராண்டித்தனமான ரஷ்யா-உக்ரைன் போர் உலகெங்கிலும் ஆழ்ந்த பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, பிரித்தானியாவும் இதில் இருந்து விடுபடவில்லை.
இப்போது, உங்களில் பலர் அந்த பாதிப்பை வீட்டில் உணர்ந்திருப்பதை நான் அறிவேன். அதனால்தான் இந்த அரசாங்கம் கடனையும் கட்டுக்குள் கொண்டுவர கடினமான ஆனால் நியாயமான முடிவுகளை எடுத்துள்ளது.” என்று சுனக் தெரிவித்துள்ளார்.