விமானி அறையில் இருந்து பயணிகளை வரவேற்ற பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 9100 இல் மும்பைக்கு செல்லும் பயணிகளை விமானி அறையிலிருந்து வரவேற்ற காணொளி பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
"இது காக்பிட்டில் இருக்கும் பிரதமர். மும்பைக்குச் செல்லும் பி.ஏ விமானம் 9100-க்கு மிகவும் அன்பான வரவேற்பு.
பிரித்தானியா - இந்தியா
உங்கள் அனைவரையும் விமானத்தில் ஏற்றிச் செல்வது மிகவும் அருமையாக இருக்கிறது. இதுவரை பிரித்தானியா இந்தியாவிற்கு மிகப்பெரிய வர்த்தகப் பணிகளை செய்துள்ளது.
எனவே எங்கள் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது உங்களுடன் இணைந்து பயணிக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் மிக முக்கியமான பொருளாதார பங்காளிகளில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தகப் பயணமாக பிரித்தானிய பிரதமர் இன்று இந்தியாவை வந்தடைந்துள்ளார்.
இங்கிலாந்தின் மிக முக்கியமான தலைமை நிர்வாக அதிகாரிகள், முன்னணி தொழில்முனைவோர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களைச் சேர்ந்த 125 பேர் கொண்ட குழு ஸ்டார்மருடன் வருகைத்தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Welcome Prime Minister Keir Starmer on your historic first visit to India with the largest ever trade delegation from the UK. Looking forward to our meeting tomorrow for advancing our shared vision of a stronger, mutually prosperous future. @Keir_Starmer pic.twitter.com/Sv29sZ6dzj
— Narendra Modi (@narendramodi) October 8, 2025
அரசாங்க வர்த்தக பயணம்
இது இந்தியாவிற்கான மிகப்பெரிய பிரித்தானிய அரசாங்க வர்த்தக பயணமாக மாறும் என கூறப்படுகிறது.
ஸ்டார்மருடன் நாளை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , தனது சமூக ஊடக பதிவில் , பிரித்தானியாவில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க முதல் வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம்.
வலுவான, பரஸ்பரம் வளமான எதிர்காலம் குறித்த நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னேற்றுவதற்காக நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறோம்" என்று கூறியுள்ளார்.




