இன ரீதியாக விமர்சிக்கப்பட்ட ரிஷி சுனக்! தொகுப்பாளரின் பதிலடி
பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இன ரீதியாக விமர்சிக்கப்பட்டதாகவும், அவ்வாறு விமர்சித்தவர்களுக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான டிரெவர் நோவா என்பவர், ரிஷி சுனக் மீதான இன ரீதியான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிட்டன் காலனியாக்கப்படவில்லை எனக்கூறியுள்ளவர், நீங்கள் ரிஷி சுனக்கை கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. அவரது நிறத்தை வைத்து எதிர்க்கிறீர்கள். அவர், பிரிட்டனை இந்தியாவிடம் விற்று விட மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன ரீதியாக விமர்சிக்கப்பட்ட ரிஷி சுனக்
பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பழமைவாத கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்ற பின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
ஆனால், ரிஷி சுனக்கை பிடிக்காத சிலர் அவரை இனரீதியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
' தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,ரேடியோ நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிஷி சுனக்கை இன ரீதியாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தார்.
பிறகு, அவரிடம் பேசும் ஒருவர், தான் பாகிஸ்தான் அல்லது சவுதி பிரதமராக இருந்தால் நன்றாக இருக்குமா? இந்த விஷயங்கள் முக்கியமானவை.
85 சதவீத வெள்ளை மக்கள் வசிக்கும் பிரிட்டன், அவர்களை பிரதிபலிக்கும் பிரதமரையே பார்க்க விரும்புகிறது எனக்கூறுகிறார்.
இதனை குறிப்பிட்டு பேசும் டிரெவர் நோவா, அவருக்கு நல்ல கருத்து கிடைத்துள்ளது. ஆங்கிலேயர்கள், தங்களை போல் யாரும் இல்லாதவர்கள் வசிக்கும் நாட்டை ஆள நினைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடிகிறதா? அந்த உலகம் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க முடியுமா? இனரீதியாக விமர்சனம் செய்பவர்கள் எப்போதும் காலனித்துவத்தை பாதுகாக்கிறார்கள்.
தாங்கள் காலனித்துவப்படுத்தப்படுவதை உணரும் வரை அதை அவர்கள் வெறும் வணிகமாகவே நினைக்கின்றனர். பிரிட்டன் மக்கள் காலனித்துவப்படவில்லை. புதிய பிரதமரும் பிரிட்டனை சேர்ந்தவர் தான்.
முதல் நாளிலேயே மேடை ஏறி, நான் மொத்த நாட்டையும் இந்தியாவிற்கு விற்க போகிறேன். இது பழிவாங்கும் நேரம். இது தான் எங்களின் திட்டம். தீபாவளி வாழ்த்துகள். எனக்கூற மாட்டார். இவ்வாறு டிரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார்.