இலங்கை மீது கடும் நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய எதிர்க்கட்சி! “சர்வதேச நீதிமன்றத்தை அணுகும் திட்டம்”
எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சி கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பினுடைய தலைவர் சென் கந்தையா (Sen Kantaya) தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரசியலின் மாற்றங்கள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்றவை இனப்படுகொலை என அரசியல்வாதிகள் ஒத்துக்கொண்டாலும் அதனை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.இவை தமிழ் மக்களின் கடமையாகும்.
தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சட்ட ஆவணங்களை சரியான முறையில் திரட்ட வேண்டும்.இவை தமிழ் மக்களின் கடமையாகும்.
தற்போது இலங்கை அரசிற்கு பல வகைகளில் நெருக்கடி நிலை காணப்படுகின்றமையினாலேயே அவர்கள் தற்போது புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சு வார்த்தையினை நடத்த தயாராகியுள்ளனர்.
எனவே தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உரிய ஆதாரங்களை திரட்ட முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி....
சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீது தடை? விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை