இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த ரிஷாட் பதியுதீன்!(Photo)
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் நேற்று (08.11.2022) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

விசேட கலந்துரையாடல்
இதன்போது, இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்கட்டான பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு நிதி உதவிகளை
வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்
நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri