இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு (VIDEO)
இலங்கை அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டுள்ளதாகவும்,இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றதென்றும், இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய சிரேஸ்ட சட்டத்தரணி அருண் குணநாதன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
KKNRS வழக்கு கடந்த வருடம் June மாதம் வெளிவந்திருந்தது.குறித்த வழக்கானது இலங்கை தமிழ் அகதிகளுக்கும் மற்றைய அகதிகளுக்கும் சாதகமான ஒரு தீர்ப்பாக அமைந்திருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் கூறிய பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்தும்,சட்ட ரீதியிலான பிழைகள் உள்ளதெனவும் தெரிவித்து பிரித்தானியாவின் உள்துறை அமைச்சினால் இதற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஸ்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, உள்துறை அமைச்சு முன்வைத்த முறைப்பாடுகளில் முழுமையான பூர்வாங்க விசாரணைகளை நடத்துவதற்கு எவ்வித விடயங்களும் இல்லை என்றும்,கீழ் நீதிமன்றம் சரிவர ஆராயந்து பல 100 பக்கங்களில் தீர்ப்பினை அளித்துள்ளமை இலங்கையில் உள்ள மனித உரிமை மீறல்களை பிரதிபலிக்கும் தீர்ப்பு என்று கூறி பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri