பிரித்தானியாவில் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த புதிய திட்டம்
புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியா புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
புதிய நடவடிக்கை
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் விடயம் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.
இந்நிலையில், புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, சட்டவிரோத புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்த திட்டம் முதலான பல்வேறு நடவடிக்கைகளை பிரித்தானியா செய்து வருகின்றது.
63 மில்லியன் பவுண்
புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு கொடுக்கும் தொகையை 63 மில்லியன் பவுண்டுகளாக பிரித்தானியா உயர்த்தியுள்ளது.
மேலும், பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனுக்கும் பிரான்ஸ் உள்துறைச் செயலரான Gerald Darmaninக்கும் இடையில் தத்தம் நாடுகள் சார்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரான்ஸ் பொலிஸாருடன் இணைந்து பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், பிரான்ஸ் எல்லையில் ரோந்து செல்லும் விடயத்தைத் ஆரம்பித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
