இலங்கைக்கான பயணம் தொடர்பில் பிரித்தானிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயணத்திற்கு எதிரான தனது ஆலோசனையை இன்று நீக்கிய போதும், அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான, TUI, செப்டெம்பர் 11 ஆம் திகதி வரையிலான பயணங்கள் இரத்து செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக, வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிர்வு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு புறப்படும் அனைத்து பயணங்களும் இரத்து
இதன் விளைவாக, துரதிர்ஷ்டவசமாக 2022, செப்டம்பர் 11 வரை இலங்கைக்குப் புறப்படும் அனைத்து பயணங்களையும் இரத்து செய்ய வேண்டியுள்ளது என்று TUI கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுடனும், புறப்படும் திகதி வரிசையில் முன்கூட்டியே தொடர்புகொள்வோம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அறிவுரை இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான TUI இன் பயணங்கள், முன்னதாக கடந்த மே மாதத்தில்
இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.