இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா விருப்பம்
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி
பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய அவர், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விபரங்களைப் பரிமாறிக் கொண்டார்.
இதன்போது இலங்கையில் எதிர்நோக்கப்படும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல்
சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான
அரசாங்கத்தின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து
பிரதமர் குணவர்தன, பிரித்தானிய அமைச்சருக்கு விளக்கமளித்த போதே அமைச்சர் தாரிக் தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam