பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை! செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்து
நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை சென்று அதனூடாக நீதி கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(30.03.2025) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம்.
இனப் பிரச்சனை
எனினும், தென்னிலங்கையில் தற்போது உள்ள அரசாங்கம் சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.
ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில் எமது இனப் பிரச்சனை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை.
இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை வைத்துக் கொண்டு அமைச்சர்கள் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இந்த அரசாங்கம் செயற்படுவதை தெட்டத் தெளிவாக காட்டுக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
