சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி

United Kingdom Sri Lanka Government Law and Order World
By DiasA Jun 24, 2024 05:00 PM GMT
Report

பிரிட்டனின் தொழில்கட்சியானது இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில், கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். 

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளுக்கு நீதி பொறுப்பு கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும்  உறுதியளித்துள்ளனர்.

யாழில் முச்சக்கரவண்டி விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி

யாழில் முச்சக்கரவண்டி விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி

தடைகள்

தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Britain Labuor Party Promised On Sl Issue Icc

இதில் கலந்து கொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர்.

மேலும், கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல், தொழில் கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட், பசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே மற்றும் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமார் ஆகியோர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார்.

சமூக ஊடக மோசடிகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சமூக ஊடக மோசடிகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல்

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள், இதை நிச்சயமாக ஆராய்வோம். இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Britain Labuor Party Promised On Sl Issue Icc

இந்த நிகழ்வில், தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது. தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

எனினும், முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார்.

புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்களினால் போராட்டம் முன்னெடுப்பு

புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்களினால் போராட்டம் முன்னெடுப்பு

பரந்துபட்ட தடைகள்

கனடா நாடாளுமன்றம் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் குறிப்பிட்ட நினைவு நாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Britain Labuor Party Promised On Sl Issue Icc

குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார்.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது.

அதன்போது, மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதோடு அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர், வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார். நாங்கள் கருத்து வெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார்.

பீல்ட் மார்சலை கட்சியில் இருந்து நீக்குங்கள் - கம்பஹா அமைப்பாளர்கள் கோரிக்கை

பீல்ட் மார்சலை கட்சியில் இருந்து நீக்குங்கள் - கம்பஹா அமைப்பாளர்கள் கோரிக்கை

சுயநிர்ணய உரிமை

சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Britain Labuor Party Promised On Sl Issue Icc

ஆனால், ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன். இலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது. எனினும், அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

105 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி

105 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி

தொழில்கட்சி

இந்த விடயத்தில் எங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது. மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை: பிரிட்டனில் வழங்கப்பட்ட உறுதிமொழி | Britain Labuor Party Promised On Sl Issue Icc

இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதாரத் தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார்.

இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார்.

அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர், தமிழ் சமூகம் தங்களுக்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். 

105 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி

105 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Whitby, Canada

27 Sep, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Montreal, Canada

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, இராமநாதபுரம்

27 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

15 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Toronto, Canada

30 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Scarborough, Canada

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, முள்ளியவளை

28 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

சுதுமலை, உடுவில், வவுனியா

26 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை, திருவையாறு

05 Oct, 1999
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு

28 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, Svendborg, Denmark

27 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

28 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, மூளாய், குருமன்காடு

24 Sep, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, கொழும்பு, Ludwigsburg, Germany, Sutton, United Kingdom, Surrey, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

23 Sep, 1984
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US