உலகை அச்சுறுத்தும் ட்ரம்பின் நடவடிக்கை.. ஸ்டார்மர் பகிரங்கம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கும் பிரித்தானியாவிற்கும் எந்தவித தொடர்பு இல்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இதுவரை பேசவில்லை என்றும், “இது வேகமாக மாறும் சூழ்நிலை. முதலில் உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும்” என ஸ்டார்மர் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரோ கைது
அமெரிக்கா, மதுரோவை போதைப்பொருள் மற்றும் ஆயுத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.

டெல்டா ஃபோர்ஸ் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரோவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லிபரல் டெமோக்ராட் தலைவர் எட் டேவி, “மதுரோ கொடூரமான, சட்டவிரோத ஆட்சியாளர் தான். ஆனால் அமெரிக்காவின் சட்டவிரோத தாக்குதல் உலகை மேலும் அபாயகரமாக்குகிறது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் தூதர் காஜா கல்லாஸ், “மதுரோவுக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை” என்றாலும், அமைதியான மாற்றமே சரியான வழி என வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் சர்வதேச சட்டம், மனித உரிமைகள், மற்றும் உலக அரசியல் நிலைப்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam