இலங்கை சாரதிகளுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளதா?
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கனரக வாகன சாரதிகளின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக இலங்கை சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் அவ்வாறு எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் சாரதி பற்றாக்குறை உள்ளதென்ற அறிவிப்பு மாத்திரமே இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பொது மேலாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டு லொறி சாரதிகளுக்கு பற்றாக்குறை உள்ளமை தொடர்பில் இலங்கை மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
அந்த வெற்றிடங்களை தீர்ப்பதற்காக இலங்கையர்கள் பிரித்தானியா நோக்கி செல்ல ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் போலி விளம்பரங்கள் பதிவிட்டுள்ளன.
அத்துடன் பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக கூறி பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாகவும் அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது மேலாளர் மங்கள ரந்தெனிய, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
You May Like This Video
