பிரித்தானியாவில் கடும் அச்சத்தில் வாழும் தமிழர்கள் - வன்முறை தீவிரம் அடையும் ஆபத்து
பிரித்தானியாவில் இனவெறி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழர்கள் தாக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், சிறுபான்மையினத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுபான்மை இனத்தவர்கள் பலர் லண்டன், லீட்ஸ், Manchester, லிவர்பூல் போன்ற நகரங்களில் தாக்கபட்டுள்ளர்கள். கடைகள் சூறையாடப்பட்டுள்ளன,
தமிழர்கள் மீதும் தாக்குதல்
லிவர்பூலில் நூலகம் கூட எரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் (Southport) கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது.
புகலிடக் கோரிக்கையாளர்
தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் இஸ்லாமிய புகலிடக் கோரிக்கையாளர் என்று பரவிய தவறான வதந்திகளைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக கூறப்படுகின்றது.
வெள்ளை நிறத்தவர்கள் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
