பிரித்தானியா - வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த வசந்த நவராத்திரி விழா (PHITO)
பிரித்தானியா - வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த வசந்த நவராத்திரி விழாவும், சந்திர ரத உற்சவமும் சனிக்கிழமை வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதலாவது தேரோட்டம் எதிர்வரும் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய,மின்சார அலங்காரங்களுடன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் Beadford Road - Bromley Road வழியாக பவனி வரும் காட்சியை அடியவர்கள் கண்டு கழிக்கலாம் என்பதுடன்,இத்திருவிழாவில் அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகரை தரிசனம் செய்தால் கவலைகளும்,கஷ்டங்கும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
