இளைஞர் பயணத் திட்டத்துக்கு பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் புதிய இளைஞர் திட்டம் ஒன்றை இன்று(20.11.2026) அறிவிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 1 இலட்சம் இளைஞர்கள் பிரிட்டனுக்கு வந்து வேலை செய்யவும், படிக்கவும், பயணம் செய்யவும் அனுமதிக்கப்படலாம்.
அதேபோல், 1 இலட்சம் பிரிட்டிஷ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இறுதி விதிமுறைகள்
திட்டத்தின் வயது வரம்பு மற்றும் தங்கும் காலம் தொடர்பான இறுதி விதிமுறைகள் இன்னும் உறுதியாகவில்லை.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உணவுப் பொருள் வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது. உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பது.

குடியேற்றம் தொடர்பாக ஆங்கிலக் கால்வாய் வழியான சட்டவிரோதப் பயணங்களைக் கட்டுப்படுத்த இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது.
வர்த்தக நிறுவனங்களுக்கான ஆவணப் பணிகளையும் செலவுகளையும் குறைப்பது போன்ற உடன்பாடுகளும் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெருக்கமான உறவு
எனினும், இந்த நடவடிக்கைகள் பிரெக்ஸிட் விவாதத்தை மீண்டும் தூண்டுவதாக கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கெமி பேடனாக், விமர்சித்துள்ளார்.
மாறாக, , ஐரோப்பாவுடன் இன்னும் நெருக்கமான உறவு தேவை என லிபரல் டெமோகிராட் தலைவர் எட் டேவி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவை மீண்டும் நெருக்கமாக்கும் முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இளைஞர் பயணத் திட்டத்தின் இறுதி விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam