வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை அழைத்துவர விசேட திட்டம்
நாட்டிற்குத் திரும்பும் நோக்கத்துடன் வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு திரும்பும் தொழிலாளர்களுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் ஒன்பது மாகாணங்களில் 09 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் காரணமாக நாட்டிற்கு அழைத்து வரப்படும் இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் நிதி சிக்கல்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு விமான டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.




