A35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு
A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பாலம் ஆனது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் நிறைவடைந்தது.
நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்தப் பாலம் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அபிவிருத்தி பணிகள்
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் கண்டாவளை பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாலத்தில் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன் பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


புனரமைப்புப் பணிகள்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (28.07.2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ.த. ஜெயசீலன், கிளீன் ஸ்ரீலங்கா – கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. மருங்கன் மோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan