அமைச்சர்களின் சொத்து அறிவிப்புகள் குறித்து விசாரிக்கவுள்ள கையூட்டல் விசாரணை ஆணைக்குழு
அமைச்சர்கள் சிலர் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் முன்னைய சொத்து அறிவிப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவர்கள் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளார்களா என்பதை கண்டறிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை
சிவில் சமூக செயற்பாட்டாளரான கமந்த சில்வா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க, நளிந்த ஜயதிஸ்ஸ, சுனில் ஹந்துன்னெத்தி, குமார ஜயகொடி மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆணைக்குழு ஏற்கனவே முறைப்பாடாளரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

அமைச்சர்கள் தங்களின் முன்னைய சொத்து அறிவிப்புகளுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட காலப்பகுதியில் அசாதாரண அளவில் செல்வம் சேர்த்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |