முல்லைத்தீவில் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு! (PHOTOS)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
ஆலய மணிகோபுரம் ஊடாக ஏறி ஆலயத்திற்குள் இறங்கிய ஆலய மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை எடுத்துக்கொண்டு பைரவர் சந்நிதிக்கு அருகில் உள்ள ஓடையில் இரும்பு கம்பியால் உடைத்து உண்டியலில் உள்ள பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் திருடனின் வருகை பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் ஆலய நிர்வாகத்தினர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri