பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உணவுகளுக்கு 10 ரூபாய் வரை விலை அதிகரிப்பு
பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக தயாரிப்பு உணவு பண்டங்களின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தில் வெதுப்பக பண்டங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சம்மேளன தலைவர் ஜெயவர்த்தன, விலை உயர்வு தொடர்பில் எதிர்வை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்றாடம் வெதுப்பக உணவுகளை கொள்வனவு செய்வோர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலையை உயர்த்தியது, வாழ்க்கை செலவை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri