பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் போது ஏற்பட்ட பதற்றம்..
பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் டாக்கா கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
போட்டி ஆரம்ப சிறிது நேரத்திற்கு முன்னர் அவர் மைதானத்தில் மயங்கி விழுந்தள்ளமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் மயக்கம்..
டாக்கா கெபிடல்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் போட்டியின் முதல் போட்டியில் டொஸ் வென்ற பிறகு மஹ்பூப் அலி ஜாக்கி மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

59 வயதான அவர், பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) அணியின் டாக்கா கெபிடல்ஸின் உதவி பயிற்சியாளராகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (பிசிபி) இணைக்கப்பட்ட சிறப்பு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 27ஆம் திகதி மதியம் 1:00 மணியளவில் சில்ஹெட்டில் ஜாக்கி காலமானார் என்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.