தொடரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு
வைத்தியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று காலை 6 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
இந்தநிலையில், நேற்றைய தினம் நிதியமைச்சின் அதிகாரிகளுடன், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில், இன்றைய தினம் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri