திருத்தந்தை பிரான்சிஸிடம் அடம்பிடித்து தொப்பி வாங்கிச்சென்ற சிறுவன்
வத்திக்கான் தேவாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸின் சொற்பொழிவை கேட்க வந்த சிறுவனொருவர், அவர் அணிந்திருந்ததைப் போன்ற வெள்ளைத் தொப்பியொன்றை அடம்பிடித்து வாங்கியுள்ளார்.
பாதுகாவலர்களைத் தாண்டி மேடையில் அமர்ந்திருந்த திருத்தந்தை பிரான்சிஸிடம் சென்று கை குலுக்கிய குறித்த மாற்றுத்திறனாளி சிறுவன், அவர் முன்னால் நின்று குதித்துள்ளதுடன், மேடையை விட்டு இறங்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவனுக்கு திருத்தந்தை பிரான்சிஸின் அருகில் இருக்கை போடப்பட்ட நிலையில் அவர் அருகே அமர்ந்த சிறுவன் அவரின் வெள்ளைத் தொப்பியைத் தனக்குத் தருமாறு தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்துள்ளார்.
இதனையடுத்து அதே போன்ற வேறொரு தொப்பியை வரவழைத்து அவனுக்கு அளித்த திருத்தந்தை பிரான்சிஸ், “கேளுங்கள் தரப்படும்” என்ற இறைவார்த்தையை சிறுவன் தத்ரூபமாக கற்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
