இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞன் - மரணத்திலும் பலரை காப்பாற்றிய செயல்
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவரின் இரு சிறுநீரகங்கள், இதயம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஐந்து நோயாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்ற இருவருக்கு ஒளி வழங்குவதற்காக அவரது கண்கள் இலங்கை கண் மருத்துவ சங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூளைச்சாவு
வேயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இந்த தியாகத்தை செய்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது தோல், இரத்த நாளங்கள் மற்றும் முழங்கால் எலும்புகள் உட்பட பல உடல் உறுப்புகள் அவரது பெற்றோரின் ஒப்புதலின் பேரில் நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளன.